Home செய்திகள் மின்னல் தாக்கி மூவர் பலி – குப்ளானில் நடந்த துயரம்:

மின்னல் தாக்கி மூவர் பலி – குப்ளானில் நடந்த துயரம்:

230
0

யாழ்-வலிகாமம் பகுதிக்குட்பட்ட குப்ளான் பகுதியில் மின்னல் தாக்கி மூவர் பரிதாபகரமாக உடல்கருகி உயிரிழந்துள்ளனர்.

இன்று (16/04) இடம்பெற்ற இத் துயர சம்பவத்தில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணுமாக மூவர் உடல்கருகிப் பலியாகியுள்ளனர்.

போர்ச் சூழல், கவலையீனங்களால் இடம்பெறும் விபத்துக்கள் எனற்றிற்கு அப்பால் இச் சாவு வித்தியாசமானது.

எந்த அசாதாரண சூழலுமின்றி, எந்த வித தவறுகளுமின்றி எதையுமறியாத அப்பாவிகளாக இம் மூவரும் இறந்துள்ளமை அப்பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.