Home தாயக செய்திகள் திடீர் முற்றுகையிட்டு உள் நுளைந்த மக்கள் – பளையில் பரபரப்பு!

திடீர் முற்றுகையிட்டு உள் நுளைந்த மக்கள் – பளையில் பரபரப்பு!

176
0

பளை, கரந்தாய்ப் பகுயில் தென்னை அபிவிருத்தி சபை கைப்பற்றி மக்களை மீளக் குடியேற விடாது தடுத்து வைத்திருந்த மக்களின் 90 ஏக்கர் காணிக்குள் திடீர் முற்றுகையிட்ட மக்கள் உள்நுளைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியும் காணிகள் கிடைக்கப் பெறாத நிலையிலேயே இன்று (16/04) காலை 6:00 மணியளவில் இவ் உள் நுளைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமது காணிகளில் கொட்டகை களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.