Home உலக செய்திகள் இலண்டன் விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் விடுதலை!

இலண்டன் விமான நிலையத்தில் கைதான 4 இலங்கையர்கள் விடுதலை!

220
0

லண்டனின் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய காவல்துறையினரால் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

லூட்டன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை வந்திறங்கிய நான்கு இலங்கையர்கள், புகலிடம் கோர முற்பட்ட போது, பிரித்தானிய அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாகவும், அப்போது அவர்கள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தாங்கள் சிறிலங்காவில் வழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாக, விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியிருந்தமைக்கு அமைவாகவே அதுதொடர்பான விசாரணைகளுக்காக கைது செய்து தடுத்து வைத்திருந்ததாகவும், பின்னர் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவர்களிடம் விசாரணைகள் தொடரும் எனவும் பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக உத்தியோகப் பற்றற்ற செய்திகள் கூறுகின்றன.