Home தாயக செய்திகள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி – பருத்தித்துறையில் சம்பவம்!

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி – பருத்தித்துறையில் சம்பவம்!

167
0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்பவரே உயிரிழந்தவர் ஆவர்.

சித்திரைப் புதுவருடப் பிறப்பான நேற்று (14/04) பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பிற்பகல் 3:00 மணியளவில் அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.