Home தமிழகச் செய்திகள் புரிதல் இல்லாதோரின் விமர்சனம் – லோறன்ஸிடம் வருத்தம் தெரிவித்த சீமான்!

புரிதல் இல்லாதோரின் விமர்சனம் – லோறன்ஸிடம் வருத்தம் தெரிவித்த சீமான்!

173
0

”லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அதற்கான தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என சீமான் தெரிவித்துள்ளார்.

”நீங்கள் என்னைத் தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரிகமாகப் பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல், உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில் தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும்  நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள்.

இறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபடக் கூறுகிறேன். எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன்! ஆனால், மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும்  என்னால் தாங்கிக்கொள்ள முடியாது”. என நடைகரும், நடன ஆசிரியரும், சிறந்த சமூக சேவகருமான லோறன்ஸ் கடுமையான அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

அது தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்…

என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை, எனக்கும் என் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் சீமான்.