Home முக்கிய செய்திகள் தமிழ் மக்கள் இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழத் தயாரில்லை – மாவை

தமிழ் மக்கள் இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழத் தயாரில்லை – மாவை

170
0

“இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழத் தயாரில்லை. தமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அதன்போது மேலும் தெரிவித்ததாது;

கேப்பாப்பிலவு மண்ணிலிருந்து இராணுவத்தினர் உடன் வெளியேற வேண்டும். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில் ஆரம்பமானபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதையும் மீறி அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம்.

தமிழ் மக்கள் இனியும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழத் தயாரில்லை. தமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. சாத்வீக வழியில் எமது உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.