Home செய்திகள் கடும் வறட்ச்சியால் மன்னார், யாழ், முல்லை மாவட்டங்கள் பாதிப்பு!

கடும் வறட்ச்சியால் மன்னார், யாழ், முல்லை மாவட்டங்கள் பாதிப்பு!

171
0

அதிக வறட்சியால் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் கடும் பதிப்பிற்குள்ளாகியுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் அதிகமாக நீடித்துவரும் கடும் வெப்ப நிலையால் குறித்த மூன்று மாவட்டங்களிலும் குழங்கள், கிணறுகள் உட்பட அனைத்து நீர் நிலைகளும் வற்றி நீரின்றி காணப்படுவதால் மக்கள் மட்டுமன்றி கால நடைகள், நீர் வாழ் உயிரினங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

தமது அன்றாட தேவைக்கான நீரை பெற்றுக்கொள்ள மக்கள் அதிக தூரம் சென்று நீர் நிலைகளை தேடி வரும் நிலையில், வறட்சியால் புற்கள் கூட கருகியுள்ளமையால் உணவும், நீருமின்றி நூற்றுக்கணக்கான கால் நடைகள் உயிரிழந்துள்ளன.

சிறு குழங்கள், குட்டைகள், நீர்த் தேக்கங்கள் என்பவற்றிலும் மீன்கள் செத்துக்கிடப்படை காணமுடிகிறது. அத்தோடு நன்னீர் மீன்பிடிப்பில் தமது வாழ்வாதரத்தை நம்பியிருந்த குடும்பங்கள் முழுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.

அண்மையில் சில வயோதிபர்கள் வெப்பம் தாங்காது மயக்கடைந்து கீழே விழுந்து உயிரிழந்திருந்தனர். இதே வேளை இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு நேற் மேலே சூரியன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை இன்னும் பல உயிர்களை காவுகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்கள் முன்னேற்பாடோடு சிக்கனமாக தண்ணீரை பாவிப்பதும், அதிக வெப்பத்தை ஏற்படுத்தாத ஆடைகளை அணிவதும் உகந்தது.