
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் விசமிகளால் மீன்பிடி படகு மற்றும் கடற்றறொழில் வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
கந்தன் சுரேந்திர ராசா என்பவரின் படகும், வலைகளுமே விமமிகளால் தீக்கிரையாக்க்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் எதோ எரிந்து கொண்டிருப்பதை கண்ணுற்று கடற்கரைக்கு சென்றபோது படகு மற்றும் வலைகள் எரிந்து கொண்டிருந்ததாகவும், ஊர் மக்கள் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் அது பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.