Home செய்திகள் 10 நாள் விஜயத்தை நிறைவு செய்து வெளியேறுகிறது சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு:

10 நாள் விஜயத்தை நிறைவு செய்து வெளியேறுகிறது சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு:

155
0

10 நாள் விஜம் மேற்கொண்டு சிறீலங்கா வந்திருந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா உப குழு தனது பணிகளை நிறைவுசெய்து வெளியேறுகிறது.

தமது பயணம் தொடர்பிலும், ஆய்வுகள் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த குழு.

இந்தப்பயணத்தின்போது எமக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. தடுப்பு நிலையங்கள் அனைத்திற்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் பெறுவதற்கும் இரகசியமாக நேர்காணல்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கு ஏற்ப ஒரு தேசிய தடுப்பு பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கை சாதகமானநிலையில் உள்ளது. இரகசியத்தன்மை, பாரபட்சமின்மை, சார்பற்றதன்மை, உலகளாவியதன்மை ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் எமது பணி வழிநடத்தப்படுகிறது.

எமது குழுவினர் இலங்கையில் பொலிஸ்நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல்சிறைச்சாலைகள், இராணுவமுகாம்கள், புனர்வாழ்வுமுகாம்கள், மனநலஅமைப்பு, சிறார்புனர்வாழ்வுநிலையம் ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட்டதுடன் அரசாங்கப்பிரதிநிதிகள், மனிதஉரிமைகள்ஆணைக்குழு, சிவில்சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினோம்.

இதனையடுத்து, எமது உபகுழு இந்தப்பயணத்தின் கண்டறிவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை கையளிக்கவுள்ளது. அதில் எமது அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளைக் குறிப்பிடுவோம்.

அத்தோடு இந்த அறிக்கையை அரசதரப்புகள் பகிரங்கப்படுத்தவும் ஐ.நாஉபகுழு ஊக்குவிக்கும் என தெரிவித்தனர்.