Home தாயக செய்திகள் மட்டு – கிரான்குளத்தில் விபத்தில் சிக்கி முதியவர் பலி:

மட்டு – கிரான்குளத்தில் விபத்தில் சிக்கி முதியவர் பலி:

205
0

மட்டு – கிரான்குளத்தில்  இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்று (12/04) இடம்பெற்ற இவ் விபத்தில், கிரான்குளம் – தர்மபுரத்தைச் சேர்ந்த 62வயதுடைய ஆறுமுகம் செல்லப்பா என்ற முதியவரே உயிரிழந்தவராவார்.

பிரதான  வீதியில் பயணித்த துவிச்சக்கரவண்டி மீது  வேகமாக வந்த வான் ஒன்று மோதியதாலேயே  குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதியை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.