Home உலக செய்திகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையகம்!

புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையகம்!

543
0

எதிர் வரும் 27ம் திகதி (27/04/2019) நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வேட்பாளர் தொடர்பில் அதன் தேர்தல் ஆணையகம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (12) இரவு தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்பட்டதாக வெளிவந்துள்ள வேட்பாளர் விபரத்தில் ஆக 29 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இம்முறை அனைத்து நாடுகளிலும் மொத்தமாக 29 பேர் மட்டும் தான் போட்டியிடுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அப் பெயர் விபரங்கள் அடங்கிய அறிக்கையில் “நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – வேட்பாளர் பெயர் பட்டியல் – தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டது” என்பன மட்டுமே உள்ளது. இதுவே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளை அப் பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. அதன் அடிப்படையில் இது பிரித்தானியாவிற்குரிய வேபாளர் பட்டியல் என எடுத்துக்கொண்டாலும் அதிலும் தவறுகள் இருப்பதை காண முடிகிறது.

அதாவது குறிப்பிட்ட பெயர் பட்டியலில் வேட்பாளர் எண் 305, வேட்பாளர் எண் 313, வேட்பாளர் எண் 204 ஆகியன இடம்பெறவில்லை. இது தேர்தல் ஆணயகத்தின் தவறா…? அல்லது வேட்பாளர் அல்லாது குறித்த மூவரும் தாம் தேர்தலில் போட்டியிடுவதாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்களா…? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏனெனில் குறித்த மூன்று வேட்பாளர்களும் ஏற்கனவே தொலைக்காட்சி ஒன்றில் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சியில் தோன்றி தாம் வேட்பாளர்கள் என அடையாளப்படுத்தியிருந்தனர். அத்தோடு தமது தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களையும் சமூகவலைத் தளங்களூடாகவும், நேரில் மக்களிடமும் வினியோகித்தும் வந்திருந்தனர்.

எனவே இவ் விடையத்தில் கூடிய கவனம் எடுத்து உடனடியாக தேர்தல் ஆணையகம் குழப்பநிலையை தீர்க்க ஆவன செய்யவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.