Home உலக செய்திகள் பிரித்தானியாவில் 4 இலங்கைத் தமிழர் கைது!

பிரித்தானியாவில் 4 இலங்கைத் தமிழர் கைது!

169
0

பிரித்தானியாவின் Luton விமான நிலையத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த நன்கு பேரை பிரித்தானியக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை (08/04) அன்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து Luton விமான நிலையத்தில் வந்திறங்கிய போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் கைதுசெய்துள்ளதாக கூறியுள்ள பிரித்தானியக் காவல்துறை, குறித்த நால்வரையும் ஸ்காட்லாந்து யார்ட் பொலிஸாரின் உத்தரவிற்கமைய அவர்கள் Bedfordshire பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த புதன் கிழமை மாலை அவர்கள் சர்வதேச விமானம் ஊடாக லண்டன் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டத்தின் சரத்து 7 இன் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள்அதாகவும், .கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.