
வேலையில்லாது தவிக்கும் எமது இளம் உறவுகளுக்கு வாழும் வழியை இறைவன் வகுத்துக் கொடுக்கவேண்டும் எனவும் மக்களிடையே ஒற்றுமையையும், சிங்கள மக்களிடையே குறிப்பாக சிங்களத் தலைவர்களிடத்தே நல்ல மனமாற்றத்தையும் ஏற்படுத்தி அனைவரும் சம உரிமைகளுடன் வாழும் நிலைக்கு இப்புத்தாண்டு கால்கோள் அமைக்க வேண்டும் எனவும் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முன்னாள் வடமாகாணசபை முதலமைச்சரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அவர்கள்.
அரச படைகள் இவ்வாண்டில் எமது தாயக மண்ணில் இருந்து வெளியேறவேண்டும். எமது வடகிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எமது காணிகளைக் கையேற்பதையும் வெளியார்களைக் குடியேற்றுவதையும் நிறுத்தவேண்டும். இவ்வாறான பல எதிர்பார்ப்புக்களுடன் இப்புதிய ஆண்டை வரவேற்பதில் உங்களுடன் நானும் இணைந்துகொள்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.