
இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (12/04) பிற்பகல் நான்கு மணியளவில் நாய்கள் சரணாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்களை எடுத்துவந்து குறித்த காப்பகத்தில் பராமரிக்கும் நோக்குடனேயே இக் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நல்லூர் ஆதீன குரு முதல்வர் , பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சபை தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
