Home உலக செய்திகள் லண்டனில் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

லண்டனில் கைதானார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

162
0

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அசாஞ்சேவை கைது செய்த காவல்துறை, அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவித்தனர்.

சர்வதேச விதிகளை ஜூலியன் அசாஞ்சே தொடர்ந்து மீறியதால், அவருக்கு தாங்கள் தஞ்சம் வழங்கியதை திரும்பப்பெறுவதாக ஈகுவேடார் நாட்டின் அதிபர் லெனின் மொரீனோ தெரிவித்தார்.

ஆனால் இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ட்விட் செய்தியில், சர்வதேச சட்டவிதிகளை மீறி அசாஞ்சேக்கு தஞ்சம் வழங்கப்பட்டதை சட்டவிரோதமாக ஈகுவேடார் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே என்பது குறிப்பிடத்தக்கது.