Home செய்திகள் கடன்களுக்கான வட்டிவீதத்தை 200 அடிமானப்புள்ளி (Basis Point) க்கு குறைப்பதாக பிரதமர் அறிவிப்பு:

கடன்களுக்கான வட்டிவீதத்தை 200 அடிமானப்புள்ளி (Basis Point) க்கு குறைப்பதாக பிரதமர் அறிவிப்பு:

187
0

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் கடன்களைப் பெறுவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் கடன்களுக்கானவட்டிவீதத்தை 200 அடிமானப்புள்ளி (Basis Point) குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்தியவங்கியின் நாணயச்சபை மற்றும் வர்த்தக வங்கிகளின் தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதுடன், எதிர்வரும் சிலவாரங்களில் கடன்களுக்கான வட்டிவீதம் குறைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் பிரதமர் நேற்று இந்தவிசேட அறிவிப்பை வெளியிட்டார்.