Home முக்கிய செய்திகள் என்மீதான வழக்கு நாட்டிற்கே அபகீர்த்தி: கோத்தபாய

என்மீதான வழக்கு நாட்டிற்கே அபகீர்த்தி: கோத்தபாய

159
0

நாட்டின் மூவின மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து, பெளத்த சிங்கள பேரினவாதிகளின் ஆதரவை மட்டும் கொண்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தபாய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பித அவர் விமான நிலையத்தில் தெரிவிக்கையில் தன்மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டதாகவும், இருப்பினும் இலங்கையின் கௌரவத்திற்கு அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில்;

எனக்கு எதிராக வழக்குதாக்கல்செய்யப்பட்டமைக்கு அரசியல் நோக்கங்களே காரணம். எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை இலங்கையின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நான் ஆற்றிய பணிக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளது.

எனினும் எனக்கு எதிரான வழக்கு குறித்து இதுவரை எனக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பப்படவில்லை.

பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்  அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளேன். தற்போது அமெரிக்காவின் பதிலிற்காக காத்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.