முல்லைத்தீவு-மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்திய சேவைக்கு போதிய வசதிகள் இல்லாமை, மகப்பேற்று வைத்தியர் இன்மை, வைத்தியர்களின் அக்கறையற்ற செயற்பாடுகள் என்பவற்றை சுட்டிக்காட்டியே இன்று இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“நீங்கள் காட்டும் அலட்சியங்கள் – உயிரிழப்போ எங்களுக்கு”
“அவசர சிகிச்சைப் பிரிவு உடனடியாக அமைக்க வேண்டும்”
“மகப்பேற்று வைத்தியரை ஏன் இன்றுவரை நியமிக்கவில்லை”
“மருதுவம் இன்றி மரணத்தை ஏற்படுத்துவத்உ இன அழிப்பின் இன்னோர் அங்கமே”
“எங்கள் வரிப்பணமே உங்களின் சம்பளம்”
போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் , பதாகைகளை கையிலேந்தியும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதை காணமுடிந்தது.


