Home செய்திகள் படையினருக்கான நில அளவை போராட்டத்தால் தடுத்த மக்கள்!

படையினருக்கான நில அளவை போராட்டத்தால் தடுத்த மக்கள்!

166
0

மண்டைதீவில் படையினருக்காக காணி அபகரிக்கும் முகமாக இன்று மேற்கொள்ளப்பட்ட நில அளவை அங்குகூடிய மக்கள் தமது எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

மண்டைதீவு-கிழக்கு, அம்மன் கோயிலுக்கு முன்பாக படையினருக்காக 18 ஏக்கர் நிலத்தை அளந்துகொண்டிருந்த போதே மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கு சட்டரீதியில் படையினர் மேற்கொண்ட நகர்வுகளை அடுத்து நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இன்று மக்கள் அப்பகுதியில் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து தற்காலிகமாக நுறுத்தியுள்ளனர்.