
மாங்குளம் பகுதியில் வீதியின் ஓரமாக விழுந்திருன்த நபரின் கால்களூக்கு மேலால் டிப்பர் வாகனம் ஒன்று ஏறிச் சென்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இரு கால்களும் சிதைவுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் மக்களின் உதவியோடு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாற்பது வயது மதிக்கத்தக்க குறித்த நபர் குடிபோதையில் வீதியின் ஓரமாக விழுந்திருந்ததாகவும், அவ்வேளை அப்பகுதியால் வந்த டிப்பர் வாகனம் அவரின் கால்களுக்கு மேலால் ஏறிச் சென்றதாகவும் சம்பவ இடத்தில் நின்ற மக்கள் தெரிவித்தனர்.