Home முக்கிய செய்திகள் தமிழர்களை கைது செய்ய பயன்படுத்திய சட்டம் தனக்கு தனக்கு என்றவுடன் படக்கு படக்கு என்கிறது: நீதவான்

தமிழர்களை கைது செய்ய பயன்படுத்திய சட்டம் தனக்கு தனக்கு என்றவுடன் படக்கு படக்கு என்கிறது: நீதவான்

208
0

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. “தனக்கு தனக்கு என்றவுடன் படக்கு படக்கு படக்கு என்கிறது” என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்த வழக்கு கோட்டை நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது சந்தேக நபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக பயங்கர்வாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில், அவரது சட்டத்தரணி அஜித் பத்திரன சவாலுக்குட்படுத்தியுள்ள விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே நீதிவான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது.

முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது. என்றார்.