Home தாயக செய்திகள் கைதிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை கைவிட்டதா கூட்டமைப்பு!

கைதிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை கைவிட்டதா கூட்டமைப்பு!

188
0

அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினை ஆகிய இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பு கவனம் செலுத்துவதாக செல்வம் அடைக்கலநாதன் கூறியுள நிலையில், கைதிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரை கைவிட்டதா கூட்டமைப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

வவுனியா பண்டாரிகுளம், உக்கிளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மகளீர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் கைதிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் எதுவித முன்னேற்றமும் இன்றிக் காணப்படுவது கூட்டமைப்பு அதில் அக்கறையோடு செயற்படவில்லை என்பதையே எடுத்துக் காட்டுவதாக இவரின் இக் கூற்றானது உறுதி செய்திருக்கிறது.

ஆயுத போராட்டத்தின்போது மக்கள் தாங்களாகவே போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்ததாகவும், ஆனால் தற்போது போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் மக்களின் பசியையும் போக்கி போராட்டத்தையும் செய்ய வேண்டிய நிலையில் தாம் உள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் அபிவிருத்தி மற்றும் இன பிரச்சினை ஆகிய இரண்டு விடயத்தில் மாத்திரமே தாம் அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். அவை இரண்டும் ஒரே நேர் கோட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் எண்ணுவதாக தெரிவித்தார்.