Home செய்திகள் இரா.சம்பந்தனை ஓரம் கட்டும் மைத்திரி!

இரா.சம்பந்தனை ஓரம் கட்டும் மைத்திரி!

192
0

அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5ஆம் நாள் நடந்த அரசியலமைப்பு சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அது தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியவினால், இரா சம்பந்தனுக்கு அறிவிக்கப்பட்டும் இருந்தது.

எனினும், இந்த நியமனத்துக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேன அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்துவருவதாக கூறப்பட்டுகிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நியமனம் தொடர்பான பரிந்துரையைச் செய்வதற்காக, அரசியலமைப்பு சபை இந்த மாத இறுதியில் கூடவுள்ளது.

இந்தநிலையில், இரா.சம்பந்தனின் நியமனத்துக்கான அங்கீகாரம் சிறிலங்கா அதிபரால் இன்னமும் வழங்காமல், அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.