Home முக்கிய செய்திகள் “இது­வரை சண்டை இட்­டது போதும். இனி­மேல் சமா­தா­ன­மாக வாழுவோம்” – யாழில் சந்திரிக்கா

“இது­வரை சண்டை இட்­டது போதும். இனி­மேல் சமா­தா­ன­மாக வாழுவோம்” – யாழில் சந்திரிக்கா

214
0

இது­வரை சண்டை இட்­டது போதும். இனி­மேல் சமா­தா­ன­மாக வாழுவோம் என முன்னாள் ஆட்சியாளர் சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க யாழில் தெரிவித்தார்.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்­ற தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சந்திரிகாவை வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் பாலாலி விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.

ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட சந்திரிக்கா அங்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐம்பது (50) பேரை சந்தித்தார். அங்கு  தன்னோடு அழைத்துவந்த றுகுணு பல்கலைக்ககழத்தின் 50 மாணவர்களை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுமாறு தெரிவித்தார். இதன் போது சுவிட்ஸர்லாந்து, நெதர்லாந்து தூதுவர்கள், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

பின்னர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்­ற தேசிய நல்லிணக்க புத்தாண்டு பெருவிழாவில் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில், தமிழ்–சிங்­கள பாரம்­ப­ரிய நட­னங்­கள் மற்­றும் விளை­யாட்டு நிகழ்­வு­கள் இடம் பெற்­றதோடு, தமிழ் – சிங்­கள புத்­தாண்டு கலா­சா­ரம், பழக்க வழக்­கத்தை பிரதி பலிக்­கும் வகை­யில் மைதா­னத்­தில் ஓலை மண் வீடு­கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. மாட்டு வண்­டில், துலா போன்ற பல்­வேறு பாரம்­ப­ரிய அம்­சங்­களை உள்­ள­டங்­கிய வீடு­க­ளாக அவை அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்றை விருந்­தி­னர்­கள் பார்­வை­யிட்­ட­னர்.

அங்கு உரையாற்றிய அவர், இங்கு நடை­பெ­றும் நிகழ்வு ஒரு சமா­தா­னத்­துக்­கா­னது. இது­வரை கால­மும் தமிழ் மற்­றும் சிங்­கள மக்­கள் தங்­கள் புத்­தாண்டு கொண்­டாட்­டத்தை தனித் தனி­யாக கொண்­டா­டி­னார்­கள். ஆனால் இந்த வரு­டம் யாழ்ப்­பா­ணத்­தில் இவ்­வாறு ஒரு நிகழ்­வின் மூலம் இரண்டு இன மக்­க­ளும் இணைந்து புத்­தாண்டு கொண்­டா­ட்டங்­களைச் செய்­கி­றார்­கள். இது­வரை சண்டை இட்­டது போதும். இனி­மேல் சமா­தா­ன­மாக வாழுவோம்.

அனைத்து மத இனத்­த­வர்­க­ளும் இங்கு வந்­துள்­ள­னர்.ஒரு இனத்­தின் கலா­சா­ரத்தை ஏனைய இன மாண­வர்­கள், மக்­கள் அறிந்து கொள்ள வேண்­டும்.

இங்கு வந்­துள்ள ஆசி­ரி­யர்­கள் இந்த சமா­தா­னச் செய்­தியை மாண­வர்­க­ளுக்குச் சொல்ல வேண்­டும். நாம் அனை­வ­ரும் ஒரே இனம்­தான் .இந்த நிகழ்வு சிறப்­பாக நடை­பெ­று­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய அனை­வ­ருக்­கும் நன்­றி­கள் – என்­றார்.

தமிழர்கள் மீதான தாக்குதல்களும், நில ஆக்கிரமிப்பு போரும் உச்சம் பெற்றதும், நாகர் கோவிலில் பாடசாலைகள் மீதும், அகதிகள் தஞ்சமைந்திருந்த நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தின் மீதும் விமானக் குண்டுத்தாக்குதல்களை நடாத்திய சிறீலங்காவின் முதல் ஜனாதிபதியுமான முன்னாள் ஆட்சியாளரே சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.