Home செய்திகள் மட்டு – ஏறாவூரில் ஆயுதங்களுடன் இருவர் கைது:

மட்டு – ஏறாவூரில் ஆயுதங்களுடன் இருவர் கைது:

197
0

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இரு இளைஞர்களை  நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களான விபுலானந்தபுரம் ஐயங்கேணியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரிடமிருந்து ஒரு கைக்குண்டு, ஒரு வாள், மற்றும் இரும்பு கம்பிகள் மீட்கப்பட்டதுடன், மற்றைய நபரான பாரதிபுரத்தைச் சோந்த 22 வயதுடைய இளைஞரிடமிருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.