Home செய்திகள் இராணுவத்திடம் கையளித்த எம் உறவுகள் எங்கே..! வட்டுவாகலில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி:

இராணுவத்திடம் கையளித்த எம் உறவுகள் எங்கே..! வட்டுவாகலில் நடைபெற்ற கவனயீர்ப்பு பேரணி:

157
0

போரின் இறுதிக்கட்டத்தில்  சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று (07/04) முல்லைத்தீவு – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.

போரின் முடிவில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த இடமான வட்டுவாகல் பாலத்துக்கு அருகே- சிறிலங்கா கடற்படையின் கோத்தாபய தளம் அமைந்துள்ள இடத்துக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், வட்டுவாகல் பாலத்துக்கு அருகே கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றிருந்தனர்.