Home செய்திகள் வடக்கில் முஸ்லீம் மக்கள் மீள் குடியேற வேண்டும்: விஜயகலா

வடக்கில் முஸ்லீம் மக்கள் மீள் குடியேற வேண்டும்: விஜயகலா

178
0

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னாரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புத்தளம், பேருவலை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ், மன்னார் மாவட்டங்களில் மீள் குடியேற வேண்டும் எனவும், இதற்கான வளங்களை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.