
வடபகுதி சென்றிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு “ஜனநாயகப் போராளிகள் கட்சி” ஐ சேர்ந்த முன்னாள் போராளிகள் சிலரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, புனர்வாழ்வுக்குப் பின்னர் தாங்கள் விடுதலை செய்யப்பட்ட போதும், இராணுவத்தின் கண்காணிப்புக்குள்ளேயே தொடர்ந்து இருந்து வருவதாகவும், தமது அரசியல் செயற்பாடுகளுக்கு இராணுவத்தின் தலையீடுகளால் தடை ஏற்படுவதாகவும், இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், அதிகாரப் பகிர்வு மூலமே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ள கிறிஸ்ரினா ஜேம்ஸ், தீவிரவாத எதிர்ப்புக் குழுக்கள் மற்றும் ஆயுதக் குழுக்களை பிரதான அரசியல் வழிமுறைக்கு கொண்டு வரும் சிறப்பு நிபுணர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.