Home முக்கிய செய்திகள் பயணப் பொதிகளுடன் பயணிகளை கீழே இறக்கி திடீர் சோதனை நடாத்திய விசேட அதிரடிப்படை:

பயணப் பொதிகளுடன் பயணிகளை கீழே இறக்கி திடீர் சோதனை நடாத்திய விசேட அதிரடிப்படை:

218
0
கோப்பு படம்

புளியங்குளம் பகுதியில் பயணப் பொதிகளுடன் பயணிகளை கீழே இறக்கி திடீர் சோதனை நடாத்திய விசேட அதிரடிப்படையினரால் பயணிகள் பதற்றமடைந்துளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

நேற்று  இரவு யாழ்ப்பாணத்திலிருந்து 7.15மணியளவில் கண்டி சென்ற இ.போ.ச பேரூந்து இரவு 9.25மணியளவில் புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள விஷேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாக அமைக்கப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கை நிலையத்தில் வழிமறிக்கப்பட்டுள்ளது.

பேரூந்தினுள் ஈறிய விசேட அதிரடிப்பட்ஐயை சேர்ந்த ஒருவர் பயணிகளை அவர்களது பயணப்பொதிகளுடன் இறங்கிவருமாறு தெரிவித்துள்ளார். பின் ஒவ்வொருவராக அடையாள அட்டைகளை வேண்டிப் பார்த்து எங்கு செல்கின்றனர், அதற்காக என்ற விபரங்களை கேட்டறிந்ததோடு பயணிகளின் பயணப் பொதிகளையும் பரிசோதித்த பின்னரே பேரூந்தை செல்ல அனுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பயணிகள் தெரிவிக்கையில், இது வழமையான சோதனையும் அல்ல, வழக்கமாக சோதனை நடாத்தப்படும் சோதனை இடமும் அல்ல. ஏன் திடீரென இவ்வாறு சோதனை நடாத்தப்பட்டது என தெரியவில்லை என தெரிவித்த அவர்கள் இச் செயற்பாட்டால் தாம் பதற்றமடைந்துள்ளதாகவும், அச்சம் உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.