Home தாயக செய்திகள் தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் புதிய உப்பளம்!

தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் புதிய உப்பளம்!

291
0

யாழ் – தென்மராட்சி பிரதேசத்தில் தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் புதிதாக உப்பளம் உற்பத்திக்கு நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தைய வாமதேவன் தலைமையில் நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இவ் உற்பத்தி நிலையத்திற்கு “ஆனந்தா உப்பு நிறுவனம்” என பெயரிடப்பட்டு பெயர் பலகையும் திரைநீகம் செய்துவைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ.நிமலரோகன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன், ஹற்றன் நசனல் வங்கி முகாமையாளர் எம்.டேமியன் ரஞ்சித், பிரதேச கிராமிய வங்கி உதவித் திட்ட முகாமையாளர் கே.தியாகராஜா உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.