Home உலக செய்திகள் மக்கள் வெள்ளம் அலை மோதும் “London Tamil Market”

மக்கள் வெள்ளம் அலை மோதும் “London Tamil Market”

213
0

பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தினால் 5வது வருடமாக நடாத்தப்படும் “London Tamil Market” இலண்டன் ஹறோ பகுதியில் நடைபெற்று வருகிறது.

Harrow Leisure Centre இல் நேற்று ஆரம்பமான இம் மாபெரும் நிகழ்வு இன்று இரவு 8:00 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இன்றும் பெருந்தொகையான மக்கள் அங்கு சென்று தமக்கான பொருட்களை கொள்வனவு செய்தும், பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களையும், கலை நிகழ்வுகளையும் கண்டு களித்த மகிழ்வோடும் திரும்பிச் செல்வதை காணமுடிந்தது.

இவ் வர்த்தக சந்தையில் புடவைக் கடைகள், உணவகங்கள், கவரிங் நகைக் கடைகள், மேக்கப் நிறுவனங்கள், கேக் கடைகள், பதிப்பகங்கள், பலசரக்கு கடைகள், பனைவள பொருட்கள் விற்பனை நிலையம், ஓவியங்கள் விற்பனை நிலையம், ரவல்ஸ் நிறுவனங்கள், என பலதரப்பட்ட வர்த்தக நிறுவனங்களை காண முடிந்தது.

இது தவிர தமிழர் மருத்துவ நிறுவனம், தமிழ் தகவல் மையம், தொண்டு நிறுவனங்கள் என பலதரப்பட்ட தமிழர் நிறுவனக்களும் தமது செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலை மக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்ததையும் காணமுடிந்தது.