Home தாயக செய்திகள் துன்னாலையில் விபத்து! இளைஞன் பலி, மற்றுமொருவர் காயம்!!

துன்னாலையில் விபத்து! இளைஞன் பலி, மற்றுமொருவர் காயம்!!

205
0

வடமராட்சி, துன்னாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 18 வயதான கா.கஜீபன் என தெரியவந்துள்ளது. 

படுகாயமடைந்த 21 வயதான இளைஞன் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதுண்டு புரண்ட மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.