Home செய்திகள் இறந்து 25 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் வந்த தமிழர் உடல்!

இறந்து 25 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் வந்த தமிழர் உடல்!

182
0

25 ஆண்டுகள் முன்னர் இத்தாலியில் மரணமான தமிழரின் உடல் இன்று யாழ் வந்தடைந்தது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த எம்.ஸ்ரிபன் ஜோர்ஜ் என்பவரின் இடலே இவ்வாறு 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளது.

இத்தாலி நாட்டில் எம்.ஸ்ரிபன் ஜோர்ஜ் என்பவர் தொழில் புரிந்து வந்த நிலையில் நோயினால் பீடிக்கப்பட்ட அவர் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி (49 வது வயதில்) இத்தாலியில் மரணமடைந்துள்ளார். 

அப்போது இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காரணத்தினால் இறந்தவரின் உடலினை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத காரணத்தினாலும் யுத்தம் எப்போது முடிவடையும் என்று தெரியாத காரணத்தினாலும் இத்தாலியில் இருந்த உறவினர்கள் 25 ஆண்டுகளுக்கு உடலினை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

2009 இல் நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினை பொறுப்பேற்பதில் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

தர்போது 25 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இறந்தவரின் உடல் இன்று (07/04) அதிகாலை யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.