Home தாயக செய்திகள் “அன்னிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்”

“அன்னிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்”

208
0

இந்து சமயத்துக்கு எதிரான தொடர் வன்முறைகளை கண்டித்து இந்து அமைப்புக்களின் கூட்ட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணா விரத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் – மருதனார்மடம் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் ஆலயத்தில் இவ் அடையாள உண்ணா விரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“சைவர்களின் பரந்த மனப்பாங்கை பலவீனமாக கருத்தாதே”,

”அந்நிய மதத்தினரின் மதமாற்றம் தமிழின அழிப்பின் இன்னொரு வடிவமா”,

”மத குருவின் மத வெறிக்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரையா”

போன்ற பதாகைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளதோடு, பெரியோர், சிறியோர் என பலரும் இப் போராட்டதில் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.