Home செய்திகள் செல்வம் எம்பியின் கூற்றுக்கு இந்து மகாசபை, இந்து மதபீடம், இந்து குருமார் பேரவை கூட்டாக கண்டனம்:

செல்வம் எம்பியின் கூற்றுக்கு இந்து மகாசபை, இந்து மதபீடம், இந்து குருமார் பேரவை கூட்டாக கண்டனம்:

191
0

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 03-04-2019 அன்று பாராளுமன்றி ஆற்றிய உரையில் உள்ள தவறாண கருத்தை சுட்டிக்காட்டி இந்து மகாசபை, இந்து மதபீடம், இந்து குருமார் பேரவை ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.

சமயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அதுபற்றிய முழுமையான தெளிவு இல்லாமல் கருத்துக்கள்ஐ கூறும் போது அவை பிழையான கருத்துக்களாக மாறி சர்ச்சைகளை ஏற்படுத்துவதோடு இனங்களுக்க்இடையே மேலும் விரிசல்களை உருவாக்க ஏதுவாக அமைந்துவிடுகிறது என அவர்களால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வரும் வேளையில், தமிழ் மக்களின் பிரதிநிதியாக உள்ள செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பாதிரியார் மார்க்கஸ் அடிகளார் பற்றி தனது பாராளுமன்ற உரையில் கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என சுட்டிக்காட்டி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, எதிர்காலத்தில் பொறுப்பான நிலையில் உள்ளவர்கள் பக்கச் சார்பின்றி நடுனிலையாக செயற்பட வேண்டும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.