Home தாயக செய்திகள் காடுகளில் இராணுவம், கிராமங்களுக்குள் யானைகள் – இடம்பெயரும் மக்கள்!

காடுகளில் இராணுவம், கிராமங்களுக்குள் யானைகள் – இடம்பெயரும் மக்கள்!

165
0

கிளிநொச்சி கல்மடுநகர்ப்பகுதியில் தொடரும் காட்டுயானைகளின் தொல்லையால் அங்கிருந்து தாங்கள் வேறு கிராமம் நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக மேற்படி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் றங்கன்குடியிருப்பு நாவல்நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.

காடுகளுக்குள் பெரும் நிலப்பரப்பை சிறீலங்கா படையினர் பயன்படுத்தி வருவதால் காடுகளுக்குள் இருக்க இடமின்றி அவதியுற்ற யானைகள் ஆவேசத்துடன் வெளீயே வந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அநைத்தையும் அழித்து வருகிறது.

குறித்த பிரதேசங்களில் காட்டுயானைகளால் பெருமளவான பயன்தரு தென்னை மரங்கள், பயிர்கள், வீடுகள், வேலிகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தப்பிரதேசத்தில் யானைகளை கட்டுப்படுத்த நிரந்தரமான ஒரு தீர்வு பெற்றுத்தரவேண்டுமென கோரியுள்ளனர்.