Home உலக செய்திகள் இலண்டனில் – 2019 ஆம் ஆண்டிற்கான தமிழர் சந்தை இன்றும் நாளையும்:

இலண்டனில் – 2019 ஆம் ஆண்டிற்கான தமிழர் சந்தை இன்றும் நாளையும்:

339
0

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் வருடம் தோறும் நடாத்தி வரும் இலண்டன் தமிழர் சந்தை இன்றும் (6/4), நாளையும் (7/4) இலண்டனில் நடைபெறவுள்ளது.

வடமேற்கு இலண்டன் பகுதியில் உள்ள harrow leicester center இல் இன்று (7/4/19) சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு இந் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

Lyca Group இன் பேற் ஆதரவுடன் நடைபெறும் இவ் மாபெரும் தமிழர் சந்தை இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. இரு நாட்களும் காலை 10:00 மணி முதல் மாலை 8:00 மணிவரை இச் சந்தை இடம்பெறவுள்ளது.

இங்கு வருவோரை மகிழ்வூட்ட வழமை போல் ஆடல், பாடல், நாடக, நகைச்சுவை என பல கலை நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது. அத்தோடு பல்சுவை உணவுகளையும் ருசித்துப்பார்க்க ஏதுவான இடமாக அமைவதோடு இலண்டனின் எட்டுத்திக்கும் பரந்து விரிந்து வணிகத்தில் உச்சம்பெற்ற பல நூற்றுக்கணக்காண பல்துறை வர்த்தக நிலையங்களையும் ஓர் இடத்தில் சந்தித்து உங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொள்ளவும், அறிமுகம் பெற்றிடவும் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது “இலண்டன் தமிழர் சந்தை”