
சிறீலங்கா கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயனித்த மூன்று படகுகளும் கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
காங்கேசன் துறைக்கும், இராமேஸ்சரத்திற்கும் இடையில் 16 கடல்மைல் தொலைவில் இக் கைது இடம்பெற்றுள்ளது.
சட்ட விரோதமான முறையில் இலங்கை வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டமையால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா கடற்படையினர் தெரிவித்தனர்.
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களும் நேற்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.