Home முக்கிய செய்திகள் இழப்பீட்டு பணியகத்திற்கு 6 ஆணையாளர்களை நியமித்தார் ஜனாதிபதி:

இழப்பீட்டு பணியகத்திற்கு 6 ஆணையாளர்களை நியமித்தார் ஜனாதிபதி:

239
0

இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்திற்கென ஆறு ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (04/04) வழங்கிவைத்தார்.

கேணல் ரத்னபிரியபந்து, தாராவிஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ..எம்.பதிஹூம், ஆகியோர் இழப்பீட்டுப் பணியகத்துக்கான ஆணையாளர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இழப்பீட்டுப் பணியகத்திற்காக 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் கேணல் ரத்னபிரிய பந்து என்பவர் விசுவம்டு பகுதியில் முன்னர் கடமையற்றிய இராணூவ அதிகாரியாகும். இவர் மக்களிடம் மிக அன்பாக பழகி, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித இராணுவ அதிகாரி. யாழ்பாணத்திலும் 1995 முதல் 1998 வரை வடமராட்சியில் கடமையாற்றிய லறி விஜேரட்ண வும் இவரைப் போன்றே மக்களிடம் பழகியவர் என்பதோடு அவரால் தமிழர்கள் இழந்தவை அதிகம். இவற்றை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்போடு செயற்பட வேண்டியது அவசியம்.