Home செய்திகள் யாழ் சிறையில் இருந்த 11 தமிழக மீனவர்கள் பிணையில் விடுதலை!

யாழ் சிறையில் இருந்த 11 தமிழக மீனவர்கள் பிணையில் விடுதலை!

194
0

சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களும் நிபந்தனையுடனான பினையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 24ம் தேதி நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு யாழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ் வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல அனுமதித்ததற்கு அமையவே இவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.