Home செய்திகள் சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கு தடை – 20 மில்லியன் நட்டஈடு வழங்க உத்தரவு:

சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கு தடை – 20 மில்லியன் நட்டஈடு வழங்க உத்தரவு:

177
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் உத்துரு ஜனனி மின் உற்பத்தி நிலையத்தினால் சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுவதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக சுட்டிக்காட்டி அதற்கு தடை உத்தரவு பிறப்பித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டீ.பீ தெஹிதெனிய ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த மின் உற்பத்தி நிலையத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்குமாறு மின் உற்பத்தி நிலையத்தை நடத்திச் சென்ற நொதர்ன் பவர் கம்பனி பிரைவட் லிமிடட் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குறித்த 20 மில்லியன் ரூபா பணத்தை பாதிப்படைந்த ஒரு குடும்பத்திற்கு உயர்ந்த பட்ச நட்டஈடாக 40,000 ரூபா வீதம் பகிர்ந்து வழங்குமாறும் அதனை தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் குழு ஒன்றின் தலைமையில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அனுமதிக்கப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக இரந்தால் மட்டுமே மீண்டும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.