Home தாயக செய்திகள் வைத்தியசாலையில் பூனை, நாய்களின் தொல்லை!

வைத்தியசாலையில் பூனை, நாய்களின் தொல்லை!

225
0

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில்   பூனை மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும், இது தொடர்பில் நிர்வாகம் மற்றும் சுகாதாரத் தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நோயாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்..

வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுற்குள்ளும், தவிர நோயாளர் விடுதிகளிலும் பூனை மற்றும் நாய்கள் சுதந்திரமாக உலாவுவதுடன் அவை நிரந்தரமாக தங்கியிருக்கின்றன.

அதுமட்டுமன்றி அவை நோயாளர்களின் உணவையும் எடுத்து உட்கொள்கின்றன.

வைத்தியசாலையில் சுகாதார வசதிகள் எதுவும் இல்லை. வீட்டை, கிராமத்தை சுத்தமாக வைத்திருங்கள் என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

ஆனால், நோயாளர்களை பராமரிக்கும் வைத்தியசாலைகள் சுகாதார வசதிகளுட்அன் இல்லை.

அழுக்கான நிலம், பளைய துருப்பிடித்த கட்டில்கள், சேதங்களோடு காணம்படும் சுவர்கள், கதவுகள் உள்ல கட்டடம் என அனைத்தும் சுகாதாரமற்றவையாகவே காணப்படுகிறது.

எனவே இது தொடர்பில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதாரத் தரப்பினர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் தெரிவித்தனர்.