Home தாயக செய்திகள் யாழ்-மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்:

யாழ்-மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள்:

205
0

யாழ்-மாவட்ட செயலகம் முன்பாக வடமாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமை“ மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்காமை ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

“தொழிலுரிமை கிடையதாம் இதுவா நல்லாட்சி”

“30 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடம் இருந்தும் பட்டதாரிகளுக்கு நியமனம் எங்கே”

“பட்ட படிப்புக்கு வேலை இல்லை எனில் பல்கலைக் கழகத்தை இழுத்து மூடு”

போன்ற வாசங்கங்களை ஏந்தியவாறு பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.