Home முக்கிய செய்திகள் இரு சிறுவர்கள் உள்ளடங்கலாக 11 தமிழர்கள் புத்தளத்தில் கைது!

இரு சிறுவர்கள் உள்ளடங்கலாக 11 தமிழர்கள் புத்தளத்தில் கைது!

221
0

புத்தளத்தில் இரு சிறுவர்கள் உள்ளடங்கலாக 11 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என அறியவந்துள்ளது.

குறித்த 11 பேரும் உடப்புவிலிருந்து கடல் வழியாக ட்ரோலர் மூலம் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்வதற்காக புத்தளத்தில் தங்கியிருந்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45/1 பிரிவின் (அ) இன் கீழ் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டதன் காரணமாக, தன்னால் இதுதொடர்பில் பிணை வழங்குவதற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்து, விசாரணைகள் நிறைவு செய்யும்வரை சந்தேக நபர்களை தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.