Home முக்கிய செய்திகள் 54 தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கு!

54 தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்கு!

195
0

54 தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று (01/04) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலு தெரிவிக்கையில்;

இதைவிட மேலும் 9 பேரில் 6 பேர் தொடர்பாக இன்னும் பொலிஸ் விசாரணைகள் முடிக்கப்படாதிருப்பதால் அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாகவும், 3 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.