Home தாயக செய்திகள் முல்லைத் தீவில் மக்களை சந்தித்தது சர்வதேச நெருக்கடிகள் குழு:

முல்லைத் தீவில் மக்களை சந்தித்தது சர்வதேச நெருக்கடிகள் குழு:

160
0

முல்லைத்தீவு மாவட்டத்திதுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நெருக்கடிகள் குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

754 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்த குறித்த குழுவினர் அவர்களின் கோரிக்கைகளையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மற்றும் சவால்களையும் கேட்டறிந்தனர்.

பின்னர் அப்பகுதி மக்களிடம் நிலைமைகள் தொடர்பில் கருத்தாய்வை மேற்கொண்ட அவர்கள் இறுதிப் போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் சென்று பார்வையிட்டனர்.