Home செய்திகள் பிரபல திரைப்பட இயங்குனர் மகேந்திரன் காலமானார்!

பிரபல திரைப்பட இயங்குனர் மகேந்திரன் காலமானார்!

166
0

இலங்கைத் தமிழரும், பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குனருமான மகேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 79 வயதுடைய புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று (02/04) காலை காலமானார்.

மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ரஜினியை வைத்து முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, அதர்வாவின் பூமராங் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார்.

சொந்த மண் மீதும், தன் இனம் மீதும் அதீத அக்கறை கொண்ட இயக்குனர் மகேந்திரன் அவர்கள் இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு சில மாதங்கள் முன்னதாக தமிழர் தாயக சென்றிருந்ததை அறிந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மகேந்திரன் அவர்களை அழைத்து நேரில் சந்தித்து , ஒன்றாக உணவருந்தி, சுமார் மூன்று மணித்தியாளங்களுக்கும் மேலாக உரையாடி அந்பாக வழியனுப்பி வைத்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.