Home செய்திகள் தெற்குடனான கூட்டணி பற்றி இன்னமும் முடிவில்லை: மாவை

தெற்குடனான கூட்டணி பற்றி இன்னமும் முடிவில்லை: மாவை

279
0

கொழும்பு மாவட்டத்தில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி போட்டியிட வேண்டும் என்று, கொழும்பு கிளை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், கொழும்பில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை” என அவர் தெரிவித்தார்.

இதே வேளை தெற்கிற்கு தமிழரசுக் கட்சி வந்தால் வடக்கிற்கு நாங்கள் போவோம் என அண்மையின் மனோ கணேசன் தெரிவித்திருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.