Home செய்திகள் மன்னார் மனித புதைகுழி பரிசோதனயில் தவறு – மீள் பரிசோதனை அவசியம்: விக்கி

மன்னார் மனித புதைகுழி பரிசோதனயில் தவறு – மீள் பரிசோதனை அவசியம்: விக்கி

235
0

மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது;

மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மனித எச்சங்கள் 500 வருடத்திற்கு முற்பட்டவை என கார்பன் பரிசோதனை அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் தற்போது இங்கு பெறப்பட்டுள்ள மனித எச்சங்கள் 50 வருடங்களுக்கு உட்பட்டவை என பரசீலித்துக் கூறுகின்றனர். எவ்வாறு இது சாத்தியப்படும்? இதில் எங்கேயோ முக்கியமான பாரதூரமான தவறு நடந்திருக்கிறது.

எனவே மனித எச்சங்கள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். என்றார்.