Home தாயக செய்திகள் மட்டுவில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

மட்டுவில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி!

207
0

மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துளனர்.

மீசாலை – புத்தூர் வீதியில் இன்று (31/03) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 24 வயதுடைய குடும்பஸ்தரான ரஜீவன் உயிரிழந்துள்ளார்.

கிடுகு ஏற்றிக் கொண்டு பயணித்த லாண்ட்மாஸ்டருடன், பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.